எந்த ஒரு நாடு தனது அடிப்படை தேவைகளை உள் நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்தி செய்து அதே உற்பத்தியின் மூலம் அன்னிய செலாவனியை ஈட்டுகிறதோ அந்த நாடே பொருளாதார பலம் பெற்றதாக திகழும்.
சரி ஒரு கிராமத்தின் பொருளாதாரத்தை எப்படி உயர்த்த முடியும்?
ஒரு நாட்டுக்கு என்ன வழிமுறைகளோ அதேதான் ஒரு கிரமத்துக்கும். நாடும் கிராமமும் அளவுகளில் தான் வேறு, ஆனால் அடிப்படை பொருளாதார தத்துவங்கள் இரண்டுக்குமே ஒன்றுதான்.
இந்த பொருளாதார அடிப்படை தத்துவத்தை சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில், திருவள்ளுவர் போகும் வழியில் இருக்கும் குத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளார் அதன் தலைவர் இளங்கோ.
அண்ணா பல்கலைகழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்த பின் "ஆயில் இந்தியாவில்" தனக்கு கிடைத்த பணியை உதறிவிட்டு மக்கள் பணியற்ற வந்தவர் இவர்.
இனி ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையில் இருந்து.
கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சதும் ஆயில் இந்தியா கம்பெனி'யில வேலை கிடைச்சுது. ஓரிஸ்ஸாவில் இருந்தேன். என் கிராத்தை அப்படியே விட்டுட்டு நான் மட்டும் வேறெங்கேயோ போய் சந்தோஷமா வாழ மனசு ஒப்பலீங்க. வசதி வாய்ப்பு இருகிறவன்கூட இப்படி ஊரைவிட்டு வெளியேற்ட்டா. அப்புறம் மனுஷ்ங்களைக் காப்பாத்தறதுதான் யாருனு ஒரு குற்ற உணர்ச்சி.
ஏற்கெனவே நான் கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தைக் கரைச்சுக் குடிச்சிருந்தேன். கிராமப் பஞ்சாயத்துங்கறது மத்திய-மாநில அரசுகளுக்கு உட்படாத 'சுய அரசங்கம்'னு சட்டம் தெளிவா சொல்லுது. ஊர் திரும்பி வந்தேன். எல்லார்கிட்டயும் பேசினேன். தேர்தல்ல நின்னேன். என்மேல நம்பிக்கை வெச்சு ஊர்மக்கள் என்னை ஜெயிக்க வெச்சாங்க. அதை நான் எனக்கான வெற்றியா நினைக்கலை. 'முடிஞ்சா இந்த ஊரை மாத்திக் காட்டுறா!னு மக்கள் விட்ட சவாலத்தான் எடுத்துகிட்டேன்.
இதோ இவரது பொருளதார தத்துவம்..
வயிறு பசிக்கிறப்போ. வசதிகளைப் பற்றி யோசிக்க முடியாது. முதலில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர நானொரு சர்வே பண்ணினென். கிராமத்து மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். வேற யாருக்கோ போய்ச் சேருது. குத்தம்பாக்கத்தில் மட்டும் ஒரு மாசத்துக்கு அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வெளியிலிருந்து வாங்கறோம். சோப்பு, சீப்புல ஆரம்பிச்சு வயலுக்கான உரம் வரை எல்லாமே வெளியில் இருந்துதான் வருது. இதில் பெரும்பாலான் பொருள்களின் மூலம் இங்குதான் உற்பத்தியாகுது.
உதாரணத்துக்கு அரிசி. மக்கள் பாடுபட்டு விவசாயம் பண்ணி. நெல்லை விளைவிக்கறாங்க. அதை மொத்த விலைக்கு வெளியூர்ல விக்கறாங்க. அது எங்கெங்கோ சுத்தி கடைசியில அரிசியா திரும்பி வருது. அதைப் பல மடங்கு விலை கொடுத்து வாங்கறங்க. ஆக அவங்களோட பொருளும் போச்சு.. பணமும் போச்சு! அப்புறம் எப்படி வறுமை ஒழியும்?
மக்களோட பணம். பணக்காரர்களிடம் தேங்காம மக்களிடமே சுழலணும். அதுக்கு நான் ஒரு வழி செஞ்சேன். கிராமத்துக்குத் தேவையான எந்த வேலைக்கும் காண்ட்ராக்டர்களின் உதவியை நாடுவதில்லை என்று முடிவு செய்தேன். கட்டடம் கட்டுவது. ரோடு போடுவது என் எல்லா வேலைகளையும் ஊர் மக்களே எடுத்துச் செய்தோம்.
அவருடைய தத்துவத்தின் மூலம் அவர் செய்து முடித்த காரியங்கள்.
- ரூ88 லட்சத்தில் கட்ட திட்டமிடப்பட்ட வடிகால் கட்டும் பணி ரூ40 லட்சத்தில் கட்டிமுடித்தது
- கள்ளசாரயம் காய்ச்சுபவர்களிடம் ரோடு போடும் பணி ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் கிராமத்தில் கள்ளச்சாரயத்தை ஒழித்தது. (நல்ல வழியில் பணம் கிடைதால் யார் தான் தப்பு பணணுவாங்க?)
- உள்ளூர் கட்டட கட்டுமானத்திற்கான செங்கல் அவர்களின் சொந்தமண்ணிலே தாயார் ஆவது.
- 15 பேர் கொண்ட சணல் பைகளுக்கான டெய்லரிங் யூனிட்டும், மற்றும் அதன் உற்பத்தி பொருட்கள் சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவது.
- குறைந்த வாட்ஸ் தெருவிளக்குகள் தயாரிப்புக்கு ஒரு யூனிட்.
- எண்ணெய் உற்பத்தி யூனிட், சோப்பு தயாரிக்கும் ஒரு யூனிட்.
"செய் அல்லது செத்துமடி" என்பார்கள் நான் செய்துவிட்டே சாக விரும்புகிறேன்.
இதை கேட்கையில் உள்ளுக்குள் ஏதோ வேகம் பிறக்குது.
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்
நன்றி :-
ஆனந்த விகடன் 07-11-2004 மற்றும் 15-11-2006 தேதியிட்ட இதழ்கள்.
3 comments:
Hello,
Good to know about Mr.Ilango's achievements, looks like he dedicated himself for the growth of the village,
Nalla News-thaan ithu.
Keep writing please.
K.Rajan
இது சம்பந்தமான பத்ரியின் முந்தைய பதிவு....
குத்தம்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோ : ஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்
நல்லது நடக்குதுங்கோ: செய்து முடித்தவன்
வருகைக்கும் என் அறியாமையின் அளவை சற்றே குறைத்தமைக்கும் நன்றி.
குத்தம்பாக்கத்திற்கு என்று தனி ஒரு வலைத்தளம் உள்ளது அதை கீழே உள்ள சுட்டியில் சென்று பார்க்கவும்.
http://www.modelvillageindia.org.in/index1.html
திரு.இளங்கோவன் நம்முள் ஒர் அதிர்வை எற்படுத்தியிருப்பது உண்மை.
Post a Comment