Saturday, November 11, 2006

இந்தியா ஓர் விவசாய நாடு!

இந்தியா ஓர் விவசாய நாடு! இந்தியர்களில் 80 விழுக்காடு விவசாயத்தையே பிரதாண தொழில்லாக கொண்டுள்ளனர் என்பது நாம் ஆனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இன்று விவசாயத்திற்கான முக்கியத்துவம் இந்தியாவில் குறைந்து கொண்டே வருகின்றது.


இயற்க்கை ஒரு பக்கம் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றால்? 1970களுக்கு பின் விவசாய முன்னேற்றதில் கவனம் செலுத்தாத நம் அரசியல்வாதிகள் பண்ணாட்டு நிறுவனம் மற்றும் உலகமயமாக்கல் அலுத்தம் காரணமாகவும் இப்பொழுது விவசாயத்தை நேரடியாகவே வஞ்சிக்க ஆரமபித்து விட்டனர்.

ஊடகங்கள் விவசாயத்தை ஒரு தீண்டதகாத துறையாகவே கொண்டுள்ளனர். ஊடகங்களில் விவசாயத்தை பற்றிய செய்திகள் மற்றும் விளம்பரங்கள் 1 விழுக்காடு மட்டுமே.

இநத சூழ்நிலையில் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்ற ஆனந்த விகடன் மற்றும் ஜீனியர் விகடன் விவசாயிகளின் பிரச்சனைகளை பேசுவதற்காகவே ஒவ்வொரு பகுதியை ஒதுக்கி உள்ளது. விவசாய துறைகளில் உள்ள பிரச்சணைகளை மக்களுக்கும் மற்றும் அதன் சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவிக்கும் முக்கியப் பணியையும் செய்யத்துவங்கியுள்ளது.

இது மிகவும் வரவேற்க்கதக்க முயற்ச்சி!

No comments: