Tuesday, November 07, 2006

லாரி + கோழி + முட்டை + 3 வருட உழைப்பு = ISO 14001

நாமக்கல் நகரம் எதற்கு எல்லாம் பெயர் போனது ?

1.நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை
2.நாமக்கல் மலைக் கோட்டை
3.லாரி
4. (கறி) கோழி
5. முட்டை
6. அனுமார் கோவில்

இவை அனைத்தும் பல ஆண்டுகளாக நாமக்கல் நகரத்திற்கு பெருமை சேர்த்த விசயங்கள். இடைப்பட்ட காலத்தில் இதே நகரம் மற்றும் ஒரு காரணத்திற்காக செய்திகளில் அடிபட்டது, அது அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகளை கொண்ட நகரம் என்பதற்காக.

ஆனால் அந்த இடர்பாட்டை தாண்டி அதே நகரம் நம் தமிழர்கள்(இந்தியர்களையும்) அனைவரையும் பெருமை படுத்தும் விதத்தில் சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை செய்திருக்கிறது. அது இந்தியாவின் முதல் ISO 14001 தரசான்றிதல் பெற்ற நகரமாக இன்று திகழ்கிறது.

ISO 14001 தரசான்று என்பது தூய்மை, சுற்றுபுறசூழல் மற்றும் சிறந்த மேலாண்மை கொண்ட நகரத்திற்கு வழங்கப்படும் தரசான்றிதல்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

6 comments:

Anonymous said...

How about AIDs? No 1 again

கோவி.கண்ணன் [GK] said...

//ISO 14001 தரசான்று என்பது தூய்மை, சுற்றுபுறசூழல் மற்றும் சிறந்த மேலாண்மை கொண்ட நகரத்திற்கு வழங்கப்படும் தரசான்றிதல்.//

உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது !
பாராட்டுக்கள் !

இவன் said...

கோவி.கண்ணன்,

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

திரு அனானி,

நாமக்கல் நகரம் AIDSல் தனது முதல் இடத்தை இழந்து சில வருடங்கள் ஆகின்றன. இதற்கு முக்கிய காரணம் மக்களிடத்து எற்பட்ட விழிப்புணர்வும், பாதிக்கப்பட்டவர்கள் படும் துயரத்தை கண்டு எற்பட்ட பயமும் தான்.

மற்றும்மொரு காரணம் வட இந்திய மநிலங்கள் சில தமது AIDS நோய்யாளிகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டதும் தான்.

நன்றி
இவன்.

குமரன் (Kumaran) said...

ஆகா. மிக நல்ல செய்தி அல்லவா இது? தெரியப்படுத்தியதற்கு நன்றி.

வெற்றி said...

/* இவை அனைத்தும் பல ஆண்டுகளாக நாமக்கல் நகரத்திற்கு பெருமை சேர்த்த விசயங்கள். */

'நாமக்கல்' இராமலிங்கம் எனும் உன்னத கவிஞர் ஒருவரும் இந்த மண்ணில் பிறந்து நாமக்கலுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் என நினைக்கிறேன். :-))

/* அது அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகளை கொண்ட நகரம் என்பதற்காக. */

நம்ப முடியாமல் இருக்கிறதே! நான் சென்னை நகரம்தான் தமிழகத்தில் அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்ட நகரம் என எண்ணியிருந்தேன். நாமக்கல் சென்னையோடு ஒப்பிடும் போது பெரிய நகரம் இல்லையே?

/* அது இந்தியாவின் முதல் ISO 14001 தரசான்றிதல் பெற்ற நகரமாக இன்று திகழ்கிறது.*/

மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தின் மற்றைய நகரங்களும், கிராமங்களும் நாமக்கல் நகரின் முன்மாதிரியைப் பின்பற்றி முன்னேற வேண்டும் என்பதே என் அவா.

இவன் said...

வெற்றி தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

நாமக்கல் கவிஞர் இரமங்கலிங்கம் பிள்ளை அவர்களை தவிர்தது எனது தவறுதான். அதனை உடனடியாக திருத்திக் கொள்கின்றேன்.


//நம்ப முடியாமல் இருக்கிறதே! நான் சென்னை நகரம்தான் தமிழகத்தில் அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்ட நகரம் என எண்ணியிருந்தேன். நாமக்கல் சென்னையோடு ஒப்பிடும் போது பெரிய நகரம் இல்லையே?//

நாமக்கல் நகரம் போக்குவரத்து துறையில் முன்னனியில் உள்ள ஒரு நகரம். இந்தியாவில் உள்ள மொத்த லாரிகளி மூன்றில் ஒரு பங்கு நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தது. இந்த லாரிகளி பணிபுரியும் ஓட்டுனர் மற்றும் பராமரிப்பளர்கள் வெளி மாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டி செல்லும் பொழுது அங்காங்கே அவற்கள் பாதுகாப்பற்ற உடலுரவினால் எய்ட்ஸ் நோய்க்கு அதிக அளவில் ஆளாக நேரிட்டது.

நாமக்கல் நகரம் AIDSல் தனது முதல் இடத்தை இழந்து சில வருடங்கள் ஆகின்றன. இதற்கு முக்கிய காரணம் மக்களிடத்து எற்பட்ட விழிப்புணர்வும், பாதிக்கப்பட்டவர்கள் படும் துயரத்தை கண்டு எற்பட்ட பயமும் தான்.

மற்றும்மொரு காரணம் வட இந்திய மநிலங்கள் சில தமது AIDS நோய்யாளிகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டதும் தான்.