அந்த படத்தின் கதையும் அதை மக்களுக்கு திரைப்படமாக தந்தவிதமும் தன்னை கவர்ந்ததாக சொன்னார். அந்த படத்தை பற்றி மேலும் பேசிக்கொண்டு இருக்கையில் "அந்த படத்தின் DVD எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்தந்த பதில் என்னை ஒரு சிறிய ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அவர் சொன்ன பதில் "உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகம் (Salt Lake county Library) ". அந்த பதில் ஒரு வியப்பை தந்தாலும் "நம் தமிழ் மக்கள் யாராவது அதை நூலகத்திற்கு நன்கொடையாக தந்திருப்பர்" என்று எனக்கு நானே ஒரு சமாதானத்தை சொல்லிக் கொண்டேன்.
ஆனால் இன்று thatstamil.com இணையதளத்தில் வந்த செய்தி என் கணிப்பை பொய்யாக்கி, ஒர் உண்மையை சொல்லியது, அது கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படம் உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகம் மட்டும் அல்லாது அமெரிக்க பொது நூலகம் அனைத்திலும் கிடைக்கிறது என்பது.
மற்றும் அத்திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி இவாண்ஸ்ட்ன் (Evanston, IL) நகர பொதுநூலகத்தில் திரையிடப்பட்டது. நமது இந்தியர்கள் அன்றி பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் பிற நாட்டவரும் ஆங்கில துணை எழுத்துக்களுடன் (English subtitle) கண்டுகளித்தனர்.
இனி கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படம் கட்டணமின்றி வாடகைக்கு அமெரிக்க பொது நூலகங்கள் வாயிலாக கிடைக்கும் (thatstamil.com-ல் ஒரு டாலர் வாடகையில் கிடைப்பதாக குறிப்பிட பட்டிருந்தது அது தவறு). மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.
கடந்த வெள்ளியன்று உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகம் சென்ற என் நண்பன் பார்த்து வந்த இன்னொரு விசயம். சமையல் பிரிவில் மூன்று பிரதாண புத்தகங்கள் வாசிப்பாளர் அனைவருக்கும் தெரியும்படி வைக்கப் பட்டிருந்தது, அந்த முன்று புத்தகமும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்டவை அவை
- ஆங்கிலம்
- சீனா மற்றும்
- தமிழ்
இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு வைரமுத்துவின் கவிதையில் இருந்து ஒரு வைர வரி ஞாபகத்திற்கு வருகிறது.
"தமிழுக்கு இனி மரணம் இல்லை!"
குறிப்பு:- உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகத்தின் தமிழ் புத்தகங்களின் புகைப்படத்தை விரைவில் இங்கு இணைக்கிறேன்.