Wednesday, December 20, 2006

தமிழுக்கு இனி மரணம் இல்லை!

ஒரு மாதத்துக்கு முன்பு எனது மலையாள நண்பன், மணிரத்தினத்தின் கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை பற்றி என்னிடம் சில்லாகித்து பேசிக் கொண்டு இருந்தார்.

அந்த படத்தின் கதையும் அதை மக்களுக்கு திரைப்படமாக தந்தவிதமும் தன்னை கவர்ந்ததாக சொன்னார். அந்த படத்தை பற்றி மேலும் பேசிக்கொண்டு இருக்கையில் "அந்த படத்தின் DVD எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்தந்த பதில் என்னை ஒரு சிறிய ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அவர் சொன்ன பதில் "உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகம் (Salt Lake county Library) ". அந்த பதில் ஒரு வியப்பை தந்தாலும் "நம் தமிழ் மக்கள் யாராவது அதை நூலகத்திற்கு நன்கொடையாக தந்திருப்பர்" என்று எனக்கு நானே ஒரு சமாதானத்தை சொல்லிக் கொண்டேன்.

ஆனால் இன்று thatstamil.com இணையதளத்தில் வந்த செய்தி என் கணிப்பை பொய்யாக்கி, ஒர் உண்மையை சொல்லியது, அது கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படம் உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகம் மட்டும் அல்லாது அமெரிக்க பொது நூலகம் அனைத்திலும் கிடைக்கிறது என்பது.

மற்றும் அத்திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி இவாண்ஸ்ட்ன் (Evanston, IL) நகர பொதுநூலகத்தில் திரையிடப்பட்டது. நமது இந்தியர்கள் அன்றி பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் பிற நாட்டவரும் ஆங்கில துணை எழுத்துக்களுடன் (English subtitle) கண்டுகளித்தனர்.

இனி கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படம் கட்டணமின்றி வாடகைக்கு அமெரிக்க பொது நூலகங்கள் வாயிலாக கிடைக்கும் (thatstamil.com-ல் ஒரு டாலர் வாடகையில் கிடைப்பதாக குறிப்பிட பட்டிருந்தது அது தவறு). மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

கடந்த வெள்ளியன்று உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகம் சென்ற என் நண்பன் பார்த்து வந்த இன்னொரு விசயம். சமையல் பிரிவில் மூன்று பிரதாண புத்தகங்கள் வாசிப்பாளர் அனைவருக்கும் தெரியும்படி வைக்கப் பட்டிருந்தது, அந்த முன்று புத்தகமும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்டவை அவை

  • ஆங்கிலம்
  • சீனா மற்றும்
  • தமிழ்

இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு வைரமுத்துவின் கவிதையில் இருந்து ஒரு வைர வரி ஞாபகத்திற்கு வருகிறது.

"தமிழுக்கு இனி மரணம் இல்லை!"

குறிப்பு:- உப்பு ஏரி நகரத்தின் பொது நூலகத்தின் தமிழ் புத்தகங்களின் புகைப்படத்தை விரைவில் இங்கு இணைக்கிறேன்.

6 comments:

CVR said...

படிக்கறதுக்கு மகிழ்ச்சியா இருக்கு!! :)
நேரம் கெடைச்சா இத படிச்சு பாருங்க!! :)

http://simplycvr.blogspot.com/2006/10/blog-post_30.html

இவன் said...

படித்து பார்த்தேன் நண்பரே அறுமை. என்னை மிகவும் கவர்தது இந்த வரிகள்

//திக்கெட்டும் தமிழர் மொழி கதிரவன் போல் பரவட்டும்
ஒற்றுமையால் உயர்ந்திடுவோம் பிரிவினைகள் நொறுங்கட்டும்//

தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

மாசிலா said...

உண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தமிழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவோம். ஆனால் இதோடு நின்று விடக்கூடாது. மேலும் புதிய திறமை படைத்தவர்கள் தமிழுக்கு தொடர்ந்து பணி ஆற்றிவரவேண்டும். நாம் ஒவ்வொருவருக்கும் அந்த கடமை இருக்கிறது. ஒரு மொழி வாழ்வதும் மறைவதும் அம்மொழி பழகும் அத்தனை மக்களின் கையில்தான் உள்ளது. மொழியின்மீது உண்மையான அக்கறை, காதல் வரவேண்டும் என்றால் மொழியின் வரலாற்றை, தன்மை, வாழ்ந்த காலம், பெருமை மற்ற மொழிகளுக்கு ஒப்பிட்டு நம் மொழியின் உயர்வினை வெளிப்படுத்துவது மூலம் அனைத்து வகுப்பு மக்களையும் கவரவேண்டும். திரைப்படங்கள் இதில் முக்கியமான பங்காற்றி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இப்போது இணையமும் இதில் சேர்ந்துகொண்டது.

தமிழுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு சேவைகள் செய்து அவளை வளர்ப்போம்.

பிறந்தது முதல், தன் பிள்ளைகளால் வளர்க்கப்படும் ஒரே தாய் "நம் தமிழ்த்தாய்!"

அன்புடன் மாசிலா!

இவன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

ஒரு மொழியின் வளர்ச்சிக்கு கலைத்துறையின் பங்கு மிக முக்கியம் A.R.ரகுமானும், மணிரத்தினமும் வட இந்தியாவையும் உலக மக்களையும் தமிழ் திரைதுறை பக்கம் திரும்பி பார்க்க வைதனர் என்றால் மிகையாகது.

திரைதுறை தவிர ஒரு மொழியை வளர்க்க அரசியல் தலைவர்களின் பங்கு மிக மிக அவசியம் குறிப்பாக
கர்ம வீரர் காமராஜர் மற்றும் அப்துல் கலாம்-மை போல் நமக்கு இன்னும் நிறைய தலைவர்களும் அவர்களது சேவையும் தேவை.


அரசியல் துறைத்தவிர தொழில் மற்றும் அறிவியல் துறையிலும் தமிழர்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இதன் மூலம் தொழில் துறையில் பணியற்ற வருபவர்கள் தமிழை ஆவலுடன் கற்பார்கள். இத்தகைய மற்றத்தை தமிழகத்தின் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நன்கு காண முடிகிறது. சென்னை வட இந்தியர்களுக்கு தமிழ் கற்று தருவதில் இன்னும் பின் தங்கியே இருக்கிறது.

தமிழன் அரசியல் மற்றும் பொருளாதார பலம் பெற்று திகழ்வான் ஆயின் அவனது மொழி மற்றும் கலை பெரிதும் மதிக்கப்படும்.

Anonymous said...

250 vayathudaya periyavarai yennal Ivan yendru solla vendiya kattayam.
Ivan, Vungal + Nambi karuthukkal, yennangal nandru.
Vasithavargal yeppadi thangal karuthukkalai / yennangalai thamizhili vungalukku theriyapaduthuvathu?

(ithuvari parichayam illavittalum) Anbudan, Poovendran (mail2poov@yahoo.com)

இவன் said...

பூவென்றான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தாங்கள் என்னுடன் prabhunkl@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளாம்