இதற்கு மாற்றாக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய சுருள் பல்புகளை பயன்பாட்டில் கொண்டுவர இருப்பதாக பிலிபைன்சின் அதிபர் கோலோரி (Gloria Macapagal Arroyo) தெறிவித்தார். இவ்வாறான நடவடிக்கையை ஆசியாவில் முதல் நாடக பிலிபைன்ஸ் நடைமுறை படுத்தவிருக்கின்றது.
இந்த மாற்று நடவடிக்கை மூலம் மின்சாரதேவையை பெரும்மளவு குறைக்க இயலும் எனவும், மின்சார உற்பத்தியை குறைப்பதன் மூலம் கரிஅமில வாயுக்கள் (Greenhouse gas) வெளியிடுவதை குறைக்க இயலும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தொழில் நுட்ப ஆலோசகர் தெரிவித்தார்.
சுருள் பல்புகள், குண்டு பல்புகளை காட்டிலும் பன் மடங்கு விலை அதிகம். இதனை சாமானியவர்களுக்கு சாமானியம் ஆக்கும் வகையில் $30 மில்லின் அளவிளான பொருளாதார உதவி திட்டதையும் கொண்டு வர இருப்பதாக மனிலாவை சேர்ந்த வங்கி மேலாளர் தெறிவித்தார்.
அதேல்லாம் சரி இந்த சுருள் பல்ப்ப உபயேகிப்பதால் அப்படி என்ன லாபம்னு கேக்கறிங்கள?
100 வாட் எரிதிறன் கொண்ட குண்டுபல்பின் வெளிசத்தை 25 வார் எரிதிறன் கொண்ட சுருள் பல்பின் மூலம் வெளிபடுத்த இயலும். சுருள் பல்பின் ஆயுட்காலம் குண்டு பல்பின் ஆயுட்காலத்தை விட 6 முதல் 10 மடங்கு அதிகம். இதன் மூலம் பொருமளவிளான எரிபொருளையும் எழை மக்களுக்கு மின்சார மானியம்மாக வழங்கும் பணத்தையும் அரசங்கத்தால் மிச்சப்படுத்த முடியும்.
அதேல்லாம் சரி இவ்வளவு எழுதிறியே நீ என்ன பல்பு உபயோகபடுத்துறனு? கேட்கிற்ங்கதானே....
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய வீட்டில் வெறும் சுருள் பல்புகள் மட்டுமே. என் வீட்டில் 16 சுருள் பல்புகள் உபயோகத்தில் உள்ளன. இதன் மூலம் சாரசரி 42 கிலோ வாட் மின்சாரம் குறைவாக உபயோகிக்கின்றேன்.
16 பல்புகள் * 60 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 57600 வாட்/ஒருமாதம்
16 பல்புகள் * 15 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 14400 வாட்/ஒருமாதம்
1 கிலோ வாட் மின்சாரம் 1 ரூபாய் என்றாலும் மாதம் கிட்டதட்ட 42 ரூபாய் எனக்கு சேமிப்பு.
நீங்க எப்போ எரிபொருளையும் உங்களது பணத்தையும் சேமிக்க போறிங்க ?
மேலும் விரிவான செய்திக்கு இங்க போங்க, சுருள் பல்ப பத்தி தெறிந்து கொள்ள இங்க போங்க
2 comments:
நண்பரே,
நல்ல தகவலைத் தந்து ஒளியை கூட்டிட்டீங்க!
இங்கே கலிபோர்னியாவில், குமிழ் விளக்குகளை விட்டு சுருள் விளக்குகளுக்கு மாற அரசாங்கம் மக்களுக்கு பணம் (REBATE) கொடுக்குது, இது போல் பல அமெரிக்க மாநிலங்கள் தனித்தனியே பல திட்டங்களை நடைமுறையில் வைத்திருக்கின்றன, ஆனால் எல்லா மக்களுக்கும் தகவல் சரியா போய்ச் சேருவதில்லை.
இது மட்டுமில்லாமல் எனர்ஜி ஸ்டார் திட்டம் நாடு முழுதும் தள்ளுபடி திட்டம் வைத்திருக்கிறது, கலிபோர்னியாவில்
http://flexyourpower.org/ எல்லா தகவல்களையும் உங்களுக்கு தரும்.
இது தவிர அரசே தன் செலவில் சுருள் விளக்குகளை மக்களுக்கும் நகர்மன்றம் மூலமாகக் கொடுக்கிறது.
வலைபக்கம் வந்து தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நம்பி!
தாங்கள் குறிப்பிட்ட (http://flexyourpower.org/) வலைதளம் கலிபோர்னியா வாழ் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.
Post a Comment