டாடா நிறுவனத்தின் குறைந்தவிலை மகிழ்வுந்தான "நானோ" நேற்று (Jan 10, 2008 ) டெல்லியில் நடந்த மோட்டார் வாகனத்திற்கான கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது பலரது எதிர்பார்புகளை கொண்டிருக்க முக்கியகாரணம் அதன் விலையாது 1,00,000 ரூ என்பதே. இந்த வாகனம் இந்திய நடுத்தர வர்கத்துக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.
இதன் வாகனத்தின் வரவால் இந்தியாவில் நடக்கும் ஒரு சில மாற்றங்களை காண்போம்.
1. இனி இரண்டு சக்கர வாகனத்தில் மொத்த (4 நபர்) குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு போகும் பயணத்தை தவிர்கலாம். இது இரட்டை சக்கர வண்டியில் அதிகநபர்களை ஏற்றி செல்வதைக் காட்டிலும் பாதுகாப்பானதே.
2. நான்கு சக்கர வாகனத்தினர் பொரும்பான்மையானவர்கள் வாகன காப்பீடுவைத்திருப்பது வாடிக்கை. டாடாவின் நானோ இந்திய வாகன காப்பீட்டு துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.
3. இவ்வாகனத்தின் மூலம் இந்திய சாலைகளில் லேன் (Lane System) முறையை செயல் படுத்த பெரிய அளவிலான வாப்புக்கள் உள்ளன.
மேலே சொன்ன அனைத்துமே டாடாவின் நானோ இரண்டுசக்கர வாகனத்திற்கான ஒரு மாற்று வாகனமாக அமையும் என்ற கணிப்பிலே.
இப்பதிவை எழுததூண்டிய காரணிகள் இவைகள் அல்ல. டாடாவின் நானோ மேற்கத்திய நாட்டு மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் வயிற்றில் கரைத்த புளியே!
அப்படி என்னதான் இந்த நானோவால் செய்ய இயலும்
1. இந்திய சாலைகளை டாடாவின் நானோ நிறப்பும். இதனால் இந்தியாவின் எரிபொருள் தேவையை அதிகரிக்கும். அதன் பொருட்டு ஏற்படும் எரிபொருளின் தட்டுப்பாடும், விலையேற்றமும் மேற்கத்திய நாடுகளை நேரடியாக பாதிக்கும். இதனால் மேற்கத்திய நாடுகளின் மோட்டார் வாகன விற்ப்பனை மேலும் சரிவடையலாம். மேற்கத்திய தயாரிப்பு மோட்டார் வாகனங்களை முழுதாக தவிர்த்து ஜப்பானிய தயாரிப்புகளை மேலும் அதிகமாக வாங்கலாம் ஏன் நம்து டாடாவின் தயாரிப்புகளை கூட வாங்கலாம்.
2. வளரும் நாடுகளின் மோட்டார் சந்தையின் பெரும் பகுதியை இவ்வாகனம் கைபற்றும்.
3. நானோவின் எரிபொருள் சிக்கன பயன்பாட்டு திறன், அதாவது 1லிட்டர் பெட்ரோலில் 20 முதல் 26 KM செல்லும் திறன். இதை அமெரிக்க அளவுகளில் சொன்னால் 1 கேலனுக்கு (3.73 லிட்டரில்) 50 (80 KM) மைல் கடக்க இயலும். நானோவின் இந்த எரிபொருள் பயன்பாட்டு திறனும் அதன் விலையாகிய $2,600-ம் மேற்கத்திய மோட்டார் வாகன உற்பதியாளருக்கு ஒரு அழுத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகது.
நானோவில் மற்ற மோட்டார்வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பு அம்சங்கள் மிகக்குறைவாக இருப்பினும் இரண்டு சக்கர வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பானது. இவ்வாகனம் மோட்டார் சந்தையில் ஒரு வலம் வரும் என்பதை மறுக்கமுடியாது.
இந்திய மோட்டார் தயாரிப்புகளை உலகம் உற்று நோக்க வைத்தமைக்கு ஒரு சபாஷ் டாடா!!
3 comments:
இந்தப் பெட்டி பல குடும்பத்தைக் கூட்டோடு காவப் போகுது.கூடவே கைலாசத்துக்கும் அனுப்பி வைக்கும்!நாலு டயரும்,நாலு சீற்றுமிருந்தால் காராகி விடுமா? எல்லாம் நடுத்தர வர்க்கத்தின் அதீத நுகர்வு வெறியைத் தணிப்பதற்கும் அதையே காசாக்கவும் முனையும் டாட்டா பல கொலைகளை இவ்வாகனத்துக்கூடாகச் செய்யும்!இதுவெல்லாம் என்ன சார் காரூ?வெறும் பெட்டி சார்!
அனானி,
இவ்வாகனத்தில் பாதுகாப்பு குறைவாகதான் உள்ளது. மாருதி 800 புதிதாக சந்தைக்கு வந்தபோது கிட்டதட்ட இதே விமர்சனங்களை எதிர்கொண்டது. விபத்துகளில் சிக்கும் மாருதி 800-ம் கிட்டதட்ட அப்பளம்மாகுவது உண்மை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாருதியை நீண்ட பயனங்களுக்கு பயன்படுத்துவது மட்டுப்பட்டே காணப்படுகிறது. இதனால் சில உயிர் இழப்புகள் தவிர்கப்படுகின்றன.
நானோ உள்ளூர் பயன்பாட்டிற்கு உகந்தது என்றே தோன்றுகிறது. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அருமையான அலசல். நான் தவற விட்ட பல விஷயங்களை கூறி இருக்கிறீர்கள். இதன் safety standards ஐ பார்க்கும் போது இது உள்ளூரில் பயனிக்க மட்டுமே உதவக்கூடும்.
ஆக இது பல இடங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் உண்மை.
பாராட்டுக்கள்.
Post a Comment