Sunday, September 09, 2007

ஆர்டிகள் 226, அன்னிய மண்ணில் இந்தியானின் காவலன்

சமிபகாலமாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் மர்மான முறையில் இறப்பதும் அல்லது கொலை செய்யப்படுவதும், அதன் பின் பொதிய உலகஞானம் இல்லாத அவர்களது பெற்றேர் இறந்தோரின் சடலத்தை கூட காண முடியாமல் பரிதவிப்பதும் நாம் ஊடகங்களில்காண கூடிய செய்தி. இதில் மர்மான முறையில் இறந்த (அ) கொல்லப்பட்டதற்காண பின்புலத்தை அறிவதும், குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வாங்கிதருவது என்பது கணவிற்கு அப்பாற்பட்ட விசயமாகிவிட்டது.



கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி சிவகங்கை மாவட்டம் குமாரகுறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலியான திரு.சேதுராமன் மகன் சுசீந்திரன் மலோசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.



இது சம்பந்தமாக உள்ளுர் காவல் நிலையதில் தனது மகனது கொலையை பற்றி வழ்க்கு பதிவு செய்ய முயன்று இயலாத நிலையில் திரு.சேதுராமன் உயர் நீதிமன்ற தலமை நீதிபதிக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தார், அது இலவச சட்ட உதவி மையத்துக்கு வந்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது.





சேதுராஜவின் நிலையை நன்கு உணர்ந்த தலமை நீதிபதி ராமசுப்பிரமணியன் அவர்கள் மனுவை விசாரணைக்கு எடுத்து, கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் சுசீந்திரனின் உடலை மூன்று வாரங்களுக்குள் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய துதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலைக்கு காரணமானவர்களின் மீது பரமகுடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்திய அரசு பதிக்கப்பட்ட திரு.சேதுராமனுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆர்டிக்கிள் 226-ன்படி 'இந்திய மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிற்தோ. அங்கே அவர்களின் நலனைப் பாதுகாக்க வழி செய்யப்பட்டுள்ளது'. இப்படி முன்மாதிரியான உத்தரவை பிறப்பித்திருப்பதின் மூலம் அதனை உறுதி செய்திருக்கின்றது மதுரை நீதிமன்றம்.

நன்றி:- விகடன்.

5 comments:

வடுவூர் குமார் said...

இப்படி ஒரு சட்டம் இருக்கிறதை தெரியப்படுத்தியதற்கு உங்களுக்கும் விகடனுக்கும் நன்றி

மாசிலா said...

இப்பவாவது இதை செய்தாங்களே, அதச்சொல்லுங்க!

தாய்நாட்டில் இவர்களுக்கு தக்க வேலைகள் தர இயலாத அரசாங்கம் அந்நிய நாடுகளுக்கு மூளைகளையும் மனித சக்திகளையும் இழப்புக்கு ஏலம் விடுவதில் இருக்கும் அக்கறையானது, அவர்கள் ஆபத்தில் இருக்கும் போது வந்து உதவுவதில் இருப்பது இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது. மேலை நாடுகளில் கடின வேலைகள் செய்து சம்பாதித்து தாய்நாட்டிற்கு அனுப்பும் அந்நிய செலாவணியை வைத்து அரசாங்கமும் வங்கிகளும் நல்ல லாபம் அடிப்பதில் இருக்கும் அக்கறை இவர்களின் பாதுகாப்பில் இருப்பது இல்லை.

சில சினிமாக்களில் அரபு நாடுகளில் போய் உழைப்பவர்களை பற்றி கீழ்தரமாக சித்தரிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். திறமை உள்ளவன் பிழைத்துக் கொள்ளத்தான் செய்வான்.

அரசு இத்துடன் நின்றுவிடாமல், அந்நிய நாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களின் நலண்களில் மிகுந்த அக்கறை செலுத்தி அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டும். இது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமை. குடிமகனின் உரிமை.

நல்ல பதிவு.

நம்பி.பா. said...

நல்ல தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி!

இது போன்ற நிகழ்வுகள் வளைகுடா நாடுகளிலும், மலேசியா சிங்கப்பூர் தேடிச் செல்வர்களுக்கும் அதிகமாக நடைபெறுகிறது.
இலவச சட்ட மையத்தின் மூலமாக கொணரப்பட்ட வழக்கு என்பது, மக்களுக்கு உதவும் வழிமுறைகள் இன்னமும் வேலை செய்கின்றன என்ற நம்பிக்கையை அளிக்கின்றது.

இது குறித்து மேலும் தகவல்கள் அறியப்படுத்தப்படுவது மிகவும் தேவையானது!

இவன் said...

நம்பி ரொம்பா நாள் கழித்து வலை பக்கம் வந்தமாதிரி இருக்கு.

இந்திய அரசாங்கம் என்னதான் சட்டதிட்டம் கொண்டு வந்தாலும் நம்ப மக்களும் கொஞ்சம் படிக்கனும், யோசிக்கனும்,முக்கியமா கேள்வி கேட்க கத்துக்கணூம்.

அப்பதான் இந்த மாதிரியான சம்பவங்களுக்கு முடிவுகட்ட முடியும்.

இவன் said...

வடுவூர் குமார் மற்றும் மாசிலா தங்கள் வருகைக்கு நன்றி.

மாசிலா தாங்களது பின்னூட்டத்தை உடனடியாக பிரசுரம் செய்ய இயலவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.

ஆர்டிகள் 226 என்பது ஒரு பழைய சட்டம்தான் ஆனால் அதனை இது வரை பயன்படுத்தவே இல்லை என்பதுதான் வேதனை. நல்ல வேலை இப்பொழதாவது நீதித்துறை விழித்துக் கொண்டதே.

இந்தியா அரசில் அமைப்பில் உள்ள பல நல்ல சட்டதிட்டங்கள் இதுவரை முழுவதுமாக பயன்படுத்தியது கிடையாது. அவ்வாரு பயன் படுத்தப்பட்டால் இந்தியா உலக அரங்கில் மிளிரும் என்பதில் ஐயம் இல்லை.