Saturday, February 23, 2008

காசு வாங்காத கான்வென்ட்... அசத்தல் அரசுப்பள்ளி!

சகிப்புத் தன்மையும், அர்ப்பணிப்பு குணமும் இருந் தால் அரசுப் பள்ளியைக் கூட கான்வென்ட் ரேஞ்சுக்கு மாற்றிவிட முடியும் என்று நிரூபித்திருக் கிறார் ஒரு தலைமை ஆசிரியர்.



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குப் பக்கத்தில் இருக்கிறது மாங்குடி கிராமம். சரியான போக்குவரத்து வசதிகூட இல்லாத இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கிறது. மாங்குடியை சுற்றியிருக்கிற பத்து கிராமங்களின் ஏழை மற்றும் நடுத் தரக் குடும்பத்துக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விக்கு இதுதான் ஒரே பள்ளி. வழக்கமான அரசுப் பள்ளிகள் போலவே இயங்கி வந்த இங்கே மூன்றாண்டுகளுக்கு முன் ஜோதிமணி என்பவர் தலைமை ஆசிரியராக வந்த பிறகு, மளமளவென மாற்றங்கள்!





மூன்றே ஆண்டுகளில் 'யூனிஃபார்மில் அசத்தும் மாணவ-மாணவிகள், வகுப்பறை தவறாமல் பெஞ்ச்- டெஸ்குகள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் கேபிள் இணைப்புடன் கூடிய டி.வி-க்கள், வகுப்பறைக் குள்ளேயே பைப்பைத் திருகினால் குடிநீர், கம்ப் யூட்டர் கல்வி, தையல் பயிற்சி, கைத்தொழில் பயிற்சிகள்' என பள்ளியை பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஜோதிமணி.

இதனால் கவரப்பட்ட கல்வித்துறை உயரதிகாரிகள்... புதுகை,தஞ்சை, சிவகங்கை மாவட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுப்பு கொடுத்து, இந்தப் பள்ளி நடக்கும் விதத்தைப் பார்த்துவிட்டு வரும்படி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மாவட்டத்தின் சிறந்த பள்ளியாகவும் இப்பள்ளி தேர்வாகியிருக்கிறது.

''எப்படி இப்படி சாதிக்க முடிந்தது?'' என்று ஜோதிமணியிடம் கேட்டோம்.

''இந்தப் பள்ளியில 260 ஸ்டூடன்ட்ஸ் படிக்கிறாங்க. நான் வந்த புதுசில்
மாணவர்கள் மட்டுமில்லை, சில ஆசிரியர்கள்கூட பள்ளிக்கு சரியா வர்றதில்லை. பள்ளிக் கூடத்தைச் சுத்தி ஒரே காடா இருந்துச்சு. இருந்தாலும், நமக்கு குடுத்திருக்கிற வேலையைசரியா செஞ்சாஎல்லாத் தையும் மாத்தி டலாம்னு நெனைச்சேன். அதுக்கு ஊர் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாங்க.

நான் இங்கே வந்த அடுத்த மாசம் தீபாவளி... அப்ப பேரன்ட்ஸ் மீட்டிங் போட்டு 'இந்த வருஷம் உங்க பிள்ளைகளுக்கு எடுக்கிற டிரெஸ்ஸை யூனிஃபார்மாவே எடுத்துடுங்க'னு சொன்னேன். இதில் சில குழந்தைகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாம். ஆனா, பெற்றோர் அப்படியே செஞ்சாங்க. அதுதான் எனக்குக் கிடைத்த முதல் வெற்றி. அதுக்கப்புறம் காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட் டர் வசதின்னு நீங்க இப்போ பார்க்கிறதுல முக்கால் வாசியை ஆறே மாசத்துக்குள் கொண்டு வந்துட்டோம்'' என்று சொன்னவர்,

''ஐந்தாம் வகுப்பு மாணவன் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிக்கிற அளவுக்கு இருந்தாலே போதும் என்கிறது கல்வித்துறை சட்டதிட்டம். நான் இங்கு வந்தபோது, எட்டாம் வகுப்பு படிக்கிறவன் தமிழைப் படிக்கவே தடுமாறினான். ஆனா, இப்ப ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு எட்டாம் வகுப்பு மாணவனுக்கான கல்வி அறிவைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். மாணவிகள் ஒரு வாரமானாலும்கூட ஜடையை அவிழ்த்து கட்டாம வந்துட்டிருந் தாங்க. அதை மாத்துறதுக்காக ஒரு நாள் ஒத்தை ஜடையும், மறுநாள் ரெட்டை ஜடை யும் போட்டுட்டு வரணும்னு கண்டிஷன் போட்டோம். அதுலருந்து தினசரி தலைக்கு எண்ணெய் வைத்து சுத்தமா வாரிக் கொண்டு வர ஆரம்பிச்சுட்டாங்க.

மாணவர்களுக் கிடையே கடிதம் எழுதும் திறனை வளர்க்கணும் கிறதுக்காக ஒவ்வொரு வகுப்பறையிலும் தபால் பெட்டிகளை வச்சிருக்கோம். ஒவ்வொரு வகுப் பிலும் மாணவர் களுக்குள்ளேயே ஒரு போஸ்ட்மேனும் போஸ்ட் மாஸ்டரும் இருக்கிறார்கள். மாணவ போஸ்ட் மாஸ்டரிடம் 50 காசு குடுத்தால் அவர் 'கார்ட் போர்டு' அட்டையிலான ஐந்து போஸ்ட் கார்டுகளைத் தருவார். ஸ்டூடன்ட்ஸ் அதை வாங்கி பக்கத்து வகுப்பிலிருக்கும் தனது தோழிக்கோ தோழனுக்கோ கடிதம் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிடுவார்கள். அந்தத் தபால்களை எடுத்து உரிய மாணவரிடம் சேர்ப்பது 'போஸ்ட்மேனின்' வேலை.

மாணவர்களுக்குத் தொழிற்கல்வியைக் கத்துக் கொடுக்கிறதுக்காக வருஷத்துக்கு 5,500 ரூபாய் கொடுக்குது அரசாங்கம். அதுல சாம்பிராணி, ஊதுபத்தி செய்யுறதை சொல்லிக் குடுத்தாப் போதும்னு சொல்றாங்க. நாங்க கூடுதலாப் பணத்தைப் போட்டு ரெண்டு தையல் மெஷினை வாங்கிப் போட்டோம். தையல் பயிற்சி குடுக்குறதுக்காக ஒரு டீச்சரையும் நியமித்தோம். இப்ப எங்க பசங்கள்ல பலர் தங்களுடைய டிரெஸ்களை மட்டுமில்லாம அடுத்தவங்களுக்கும் டிரெஸ் தச்சுக் குடுக்கிற அளவு தேர்ந்துட்டாங்க. கிராமத்தினரும் சக ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுக்காட்டி என்னால இதையெல்லாம் சாதிச்சுருக்க முடியாது'' என்றார் அடக்கத்துடன்.

நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரே கம்ப்யூட்டர் பற்றிய நேரடி அறிமுகம் இல்லாமலிருக்க, இங்கே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்கூட கம்ப்யூட்டரை இயக்கி 'பிரின்ட்-அவுட்' எடுக்குமளவுக்குப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களிடம் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்காக ஒரு ஆங்கில தினசரி உள்பட நான்கு தினசரிகளை வாங்கிப் போடுகிறார்கள். இதில் ஒன்றை மாணவர்கள் செலவிலேயே வாங்கிப் போடுகிறார்கள். இவற்றில் வெளிவரும் செய்திகளை பிரேயரில் மாணவர்களே வாசித்தும் காட்டுகிறார்கள். யாராவது ஒரு ஆசிரியர் லீவிலிருந்தால் அவர் நடத்த வேண்டிய பாடம் வகுப்பறையில் சி.டி. பிளேயர் மூலம் ஒளிபரப்பாகிவிடும்!

தலைமை ஆசிரியர் ஜோதிமணியைப் பற்றி சக ஆசிரியரான மேகநாதன் நம்மிடம், ''இந்தப் பள்ளியில் ஜோதிமணி சாருக்குக் கீழே நாங்களும் பணிபுரிவதைப் பெருமையா நினைக்கிறோம்'' என் கிறார் நெகிழ்வுடன்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான சக்திவேல், ''நாங்க படிக்கிறப்பெல்லாம் பதினோரு மணிக்குத்தான் வாத்தியாரே வருவார். இன்டர்வெலுக்கு வெளியில போனா திரும்ப வரவே மாட்டோம். 'ஏன்வரலை?'னு கேக்குறதுக்குக்கூட ஆள் இருக்காது. ப்ரௌஸிங் சென்டர் வச்சுருக்கிற எனக்கே கம்ப்யூட்டரை முழுமையாக உபயோகிக்கத் தெரியாது. ஆனா, இந்தப் பசங்க சர்வ சாதாரணமா கம்ப்யூட்டர்ல புகுந்து விளையாடுறதைப் பார்த்தா, நாங்க படிச்சப்பவே இந்த மாற்றங்கள் வரலியேனு ஏக்கமா இருக்குங்க'' என்கிறார்.

மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவரான பாலாமணி ரெங்கசாமி, ''எங்க ஊரு பிள்ளைகள்லாம் பணம் வாங்காத கான்வென்ட்ல படிச்சுக்கிட்டிருக்காங்க! இந்தப் பள்ளியோட வளர்ச்சிக்காக எதைக் கேட்டாலும் செஞ்சு குடுத்துட்டுத்தான் மறு வேலை. கூடிய சீக்கிரமே இங்கே இருக்கிற லைப்ரரி ஹாலுக்கு ஏ.ஸி. வசதி பண்ணிக் குடுக்கப்போறோம்'' என்றார் பெருமிதத்துடன்.

அர்ப்பணிப்பு உணர்வு என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அரசுப் பணிகளில் அது அபூர்வமாகிவிட்ட இந்த நாளில், வாழும் உதாரணமாக விளங்கும் ஜோதிமணி போன்ற விதிவிலக்குகளுக்கு அரசாங்கம் நிறையவே ஊக்கமும் அங்கீகாரமும் தரவேண்டும். அதுதான் அர்ப்பணிப்புக்குத் தருகிற அற்புதமான மரியாதையாக இருக்கும்!
நன்றி :- ஜூனியர் விகடன். Feb 24-28, 2008

Wednesday, February 06, 2008

பிலிபைன்சில் - குண்டு பல்ப்புக்கு குண்டு

ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து தற்பொழுது பிலிபைன்சும் 2010-ம் ஆண்டுக்குள் அனைத்து குண்டு பல்புகளையும் (incandescent bulb) பயன்படுத்துவதை கைவிடுகின்றது.








இதற்கு மாற்றாக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய சுருள் பல்புகளை பயன்பாட்டில் கொண்டுவர இருப்பதாக பிலிபைன்சின் அதிபர் கோலோரி (Gloria Macapagal Arroyo) தெறிவித்தார். இவ்வாறான நடவடிக்கையை ஆசியாவில் முதல் நாடக பிலிபைன்ஸ் நடைமுறை படுத்தவிருக்கின்றது.








இந்த மாற்று நடவடிக்கை மூலம் மின்சாரதேவையை பெரும்மளவு குறைக்க இயலும் எனவும், மின்சார உற்பத்தியை குறைப்பதன் மூலம் கரிஅமில வாயுக்கள் (Greenhouse gas) வெளியிடுவதை குறைக்க இயலும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தொழில் நுட்ப ஆலோசகர் தெரிவித்தார்.


சுருள் பல்புகள், குண்டு பல்புகளை காட்டிலும் பன் மடங்கு விலை அதிகம். இதனை சாமானியவர்களுக்கு சாமானியம் ஆக்கும் வகையில் $30 மில்லின் அளவிளான பொருளாதார உதவி திட்டதையும் கொண்டு வர இருப்பதாக மனிலாவை சேர்ந்த வங்கி மேலாளர் தெறிவித்தார்.


அதேல்லாம் சரி இந்த சுருள் பல்ப்ப உபயேகிப்பதால் அப்படி என்ன லாபம்னு கேக்கறிங்கள?



100 வாட் எரிதிறன் கொண்ட குண்டுபல்பின் வெளிசத்தை 25 வார் எரிதிறன் கொண்ட சுருள் பல்பின் மூலம் வெளிபடுத்த இயலும். சுருள் பல்பின் ஆயுட்காலம் குண்டு பல்பின் ஆயுட்காலத்தை விட 6 முதல் 10 மடங்கு அதிகம். இதன் மூலம் பொருமளவிளான எரிபொருளையும் எழை மக்களுக்கு மின்சார மானியம்மாக வழங்கும் பணத்தையும் அரசங்கத்தால் மிச்சப்படுத்த முடியும்.


அதேல்லாம் சரி இவ்வளவு எழுதிறியே நீ என்ன பல்பு உபயோகபடுத்துறனு? கேட்கிற்ங்கதானே....


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய வீட்டில் வெறும் சுருள் பல்புகள் மட்டுமே. என் வீட்டில் 16 சுருள் பல்புகள் உபயோகத்தில் உள்ளன. இதன் மூலம் சாரசரி 42 கிலோ வாட் மின்சாரம் குறைவாக உபயோகிக்கின்றேன்.

16 பல்புகள் * 60 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 57600 வாட்/ஒருமாதம்

16 பல்புகள் * 15 வாட் * 2 மணி நேரம் * 30 நாட்கள் = 14400 வாட்/ஒருமாதம்

1 கிலோ வாட் மின்சாரம் 1 ரூபாய் என்றாலும் மாதம் கிட்டதட்ட 42 ரூபாய் எனக்கு சேமிப்பு.

நீங்க எப்போ எரிபொருளையும் உங்களது பணத்தையும் சேமிக்க போறிங்க ?

மேலும் விரிவான செய்திக்கு இங்க போங்க, சுருள் பல்ப பத்தி தெறிந்து கொள்ள இங்க போங்க

Wednesday, January 30, 2008

ஒரு கோடி தொழில்முணைவர்கள்

இன்று முன்பகல் (Jan 30, 2008 11:00AM to 12:00 PM) WNPR பண்பலைவரிசையில் (FM Radio) "On Point" எனும் நிகழ்சி கேட்க வாய்ப்புகிடைத்தது. இதில் தருண் கண்ணன் எழுதிய "Billions of Entrepreneurs: How China and India Are Reshaping " புத்தகத்தின் மீதான கலந்துரையாடல் மற்றும் ஆசிரியருடனான நேர்காணல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் இந்தியவை பற்றி நாம் ஆனைவரும் அறிந்த விசயங்களை சற்றே மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கின்றார் புத்தகத்தின் ஆசிரியர், உதரணங்களுக்கு சில

  1. இந்தியா சீனாவின் உற்பத்திதுறை இயந்தியர்களின் புதிய, புதிய வடிமைப்புகளையே உற்பத்திசெய்கின்றன.
  2. இந்தியாவின் வலிமை அதனது மதிநுட்பமே, சீனாவின் வலிமை அதனது உற்பத்திறனும் தொழிலாள்களுமே.
  3. இந்தியா சீனாவிடம் இருந்து கற்றுகொள்வதை காட்டிலும் சீனா இந்தியாவிடம் இருந்து அதிகம் கற்க வேண்டியுள்ளது (!!!!)
  4. இந்தியாவின் அரசாங்கம் சீனாவின் அரசாங்கத்தை காட்டிலும் தொழிழ் மற்றும் மக்கள் நலன் விரும்பும் அரசு.

மேலும் Mahaindara & Mahaindar- வின் தாயாரிப்புகளான சிறிய வகை விவசாய கருவிகள் அமெரிக்க சந்தையில் அதிகம் புளங்குவது மற்றும், இந்தியாவின் முன்னேற்றதின் பல காரணிகள் அலசப்பட்டது.

மேலும் தகவலுக்கு இங்கே சொடுக்குங்கள். இது MP3 வடிவில் தரவிரக்கம் செய்யும் கொண்டுள்ளது.

Thursday, January 10, 2008

டாடாவின்- நானோ

டாடா நிறுவனத்தின் குறைந்தவிலை மகிழ்வுந்தான "நானோ" நேற்று (Jan 10, 2008 ) டெல்லியில் நடந்த மோட்டார் வாகனத்திற்கான கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது பலரது எதிர்பார்புகளை கொண்டிருக்க முக்கியகாரணம் அதன் விலையாது 1,00,000 ரூ என்பதே. இந்த வாகனம் இந்திய நடுத்தர வர்கத்துக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.




இதன் வாகனத்தின் வரவால் இந்தியாவில் நடக்கும் ஒரு சில மாற்றங்களை காண்போம்.

1. இனி இரண்டு சக்கர வாகனத்தில் மொத்த (4 நபர்) குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு போகும் பயணத்தை தவிர்கலாம். இது இரட்டை சக்கர வண்டியில் அதிகநபர்களை ஏற்றி செல்வதைக் காட்டிலும் பாதுகாப்பானதே.
2. நான்கு சக்கர வாகனத்தினர் பொரும்பான்மையானவர்கள் வாகன காப்பீடுவைத்திருப்பது வாடிக்கை. டாடாவின் நானோ இந்திய வாகன காப்பீட்டு துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.
3. இவ்வாகனத்தின் மூலம் இந்திய சாலைகளில் லேன் (Lane System) முறையை செயல் படுத்த பெரிய அளவிலான வாப்புக்கள் உள்ளன.

மேலே சொன்ன அனைத்துமே டாடாவின் நானோ இரண்டுசக்கர வாகனத்திற்கான ஒரு மாற்று வாகனமாக அமையும் என்ற கணிப்பிலே.

இப்பதிவை எழுததூண்டிய காரணிகள் இவைகள் அல்ல. டாடாவின் நானோ மேற்கத்திய நாட்டு மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் வயிற்றில் கரைத்த புளியே!


அப்படி என்னதான் இந்த நானோவால் செய்ய இயலும்


1. இந்திய சாலைகளை டாடாவின் நானோ நிறப்பும். இதனால் இந்தியாவின் எரிபொருள் தேவையை அதிகரிக்கும். அதன் பொருட்டு ஏற்படும் எரிபொருளின் தட்டுப்பாடும், விலையேற்றமும் மேற்கத்திய நாடுகளை நேரடியாக பாதிக்கும். இதனால் மேற்கத்திய நாடுகளின் மோட்டார் வாகன விற்ப்பனை மேலும் சரிவடையலாம். மேற்கத்திய தயாரிப்பு மோட்டார் வாகனங்களை முழுதாக தவிர்த்து ஜப்பானிய தயாரிப்புகளை மேலும் அதிகமாக வாங்கலாம் ஏன் நம்து டாடாவின் தயாரிப்புகளை கூட வாங்கலாம்.


2. வளரும் நாடுகளின் மோட்டார் சந்தையின் பெரும் பகுதியை இவ்வாகனம் கைபற்றும்.


3. நானோவின் எரிபொருள் சிக்கன பயன்பாட்டு திறன், அதாவது 1லிட்டர் பெட்ரோலில் 20 முதல் 26 KM செல்லும் திறன். இதை அமெரிக்க அளவுகளில் சொன்னால் 1 கேலனுக்கு (3.73 லிட்டரில்) 50 (80 KM) மைல் கடக்க இயலும். நானோவின் இந்த எரிபொருள் பயன்பாட்டு திறனும் அதன் விலையாகிய $2,600-ம் மேற்கத்திய மோட்டார் வாகன உற்பதியாளருக்கு ஒரு அழுத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகது.



நானோவில் மற்ற மோட்டார்வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பு அம்சங்கள் மிகக்குறைவாக இருப்பினும் இரண்டு சக்கர வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பானது. இவ்வாகனம் மோட்டார் சந்தையில் ஒரு வலம் வரும் என்பதை மறுக்கமுடியாது.


இந்திய மோட்டார் தயாரிப்புகளை உலகம் உற்று நோக்க வைத்தமைக்கு ஒரு சபாஷ் டாடா!!