Thursday, January 10, 2008

டாடாவின்- நானோ

டாடா நிறுவனத்தின் குறைந்தவிலை மகிழ்வுந்தான "நானோ" நேற்று (Jan 10, 2008 ) டெல்லியில் நடந்த மோட்டார் வாகனத்திற்கான கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது பலரது எதிர்பார்புகளை கொண்டிருக்க முக்கியகாரணம் அதன் விலையாது 1,00,000 ரூ என்பதே. இந்த வாகனம் இந்திய நடுத்தர வர்கத்துக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.




இதன் வாகனத்தின் வரவால் இந்தியாவில் நடக்கும் ஒரு சில மாற்றங்களை காண்போம்.

1. இனி இரண்டு சக்கர வாகனத்தில் மொத்த (4 நபர்) குடும்பத்தையும் ஏற்றிக் கொண்டு போகும் பயணத்தை தவிர்கலாம். இது இரட்டை சக்கர வண்டியில் அதிகநபர்களை ஏற்றி செல்வதைக் காட்டிலும் பாதுகாப்பானதே.
2. நான்கு சக்கர வாகனத்தினர் பொரும்பான்மையானவர்கள் வாகன காப்பீடுவைத்திருப்பது வாடிக்கை. டாடாவின் நானோ இந்திய வாகன காப்பீட்டு துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.
3. இவ்வாகனத்தின் மூலம் இந்திய சாலைகளில் லேன் (Lane System) முறையை செயல் படுத்த பெரிய அளவிலான வாப்புக்கள் உள்ளன.

மேலே சொன்ன அனைத்துமே டாடாவின் நானோ இரண்டுசக்கர வாகனத்திற்கான ஒரு மாற்று வாகனமாக அமையும் என்ற கணிப்பிலே.

இப்பதிவை எழுததூண்டிய காரணிகள் இவைகள் அல்ல. டாடாவின் நானோ மேற்கத்திய நாட்டு மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் வயிற்றில் கரைத்த புளியே!


அப்படி என்னதான் இந்த நானோவால் செய்ய இயலும்


1. இந்திய சாலைகளை டாடாவின் நானோ நிறப்பும். இதனால் இந்தியாவின் எரிபொருள் தேவையை அதிகரிக்கும். அதன் பொருட்டு ஏற்படும் எரிபொருளின் தட்டுப்பாடும், விலையேற்றமும் மேற்கத்திய நாடுகளை நேரடியாக பாதிக்கும். இதனால் மேற்கத்திய நாடுகளின் மோட்டார் வாகன விற்ப்பனை மேலும் சரிவடையலாம். மேற்கத்திய தயாரிப்பு மோட்டார் வாகனங்களை முழுதாக தவிர்த்து ஜப்பானிய தயாரிப்புகளை மேலும் அதிகமாக வாங்கலாம் ஏன் நம்து டாடாவின் தயாரிப்புகளை கூட வாங்கலாம்.


2. வளரும் நாடுகளின் மோட்டார் சந்தையின் பெரும் பகுதியை இவ்வாகனம் கைபற்றும்.


3. நானோவின் எரிபொருள் சிக்கன பயன்பாட்டு திறன், அதாவது 1லிட்டர் பெட்ரோலில் 20 முதல் 26 KM செல்லும் திறன். இதை அமெரிக்க அளவுகளில் சொன்னால் 1 கேலனுக்கு (3.73 லிட்டரில்) 50 (80 KM) மைல் கடக்க இயலும். நானோவின் இந்த எரிபொருள் பயன்பாட்டு திறனும் அதன் விலையாகிய $2,600-ம் மேற்கத்திய மோட்டார் வாகன உற்பதியாளருக்கு ஒரு அழுத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகது.



நானோவில் மற்ற மோட்டார்வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பு அம்சங்கள் மிகக்குறைவாக இருப்பினும் இரண்டு சக்கர வாகனத்தை காட்டிலும் பாதுகாப்பானது. இவ்வாகனம் மோட்டார் சந்தையில் ஒரு வலம் வரும் என்பதை மறுக்கமுடியாது.


இந்திய மோட்டார் தயாரிப்புகளை உலகம் உற்று நோக்க வைத்தமைக்கு ஒரு சபாஷ் டாடா!!

Sunday, September 09, 2007

ஆர்டிகள் 226, அன்னிய மண்ணில் இந்தியானின் காவலன்

சமிபகாலமாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் மர்மான முறையில் இறப்பதும் அல்லது கொலை செய்யப்படுவதும், அதன் பின் பொதிய உலகஞானம் இல்லாத அவர்களது பெற்றேர் இறந்தோரின் சடலத்தை கூட காண முடியாமல் பரிதவிப்பதும் நாம் ஊடகங்களில்காண கூடிய செய்தி. இதில் மர்மான முறையில் இறந்த (அ) கொல்லப்பட்டதற்காண பின்புலத்தை அறிவதும், குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வாங்கிதருவது என்பது கணவிற்கு அப்பாற்பட்ட விசயமாகிவிட்டது.



கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி சிவகங்கை மாவட்டம் குமாரகுறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலியான திரு.சேதுராமன் மகன் சுசீந்திரன் மலோசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.



இது சம்பந்தமாக உள்ளுர் காவல் நிலையதில் தனது மகனது கொலையை பற்றி வழ்க்கு பதிவு செய்ய முயன்று இயலாத நிலையில் திரு.சேதுராமன் உயர் நீதிமன்ற தலமை நீதிபதிக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தார், அது இலவச சட்ட உதவி மையத்துக்கு வந்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது.





சேதுராஜவின் நிலையை நன்கு உணர்ந்த தலமை நீதிபதி ராமசுப்பிரமணியன் அவர்கள் மனுவை விசாரணைக்கு எடுத்து, கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் சுசீந்திரனின் உடலை மூன்று வாரங்களுக்குள் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய துதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலைக்கு காரணமானவர்களின் மீது பரமகுடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்திய அரசு பதிக்கப்பட்ட திரு.சேதுராமனுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆர்டிக்கிள் 226-ன்படி 'இந்திய மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிற்தோ. அங்கே அவர்களின் நலனைப் பாதுகாக்க வழி செய்யப்பட்டுள்ளது'. இப்படி முன்மாதிரியான உத்தரவை பிறப்பித்திருப்பதின் மூலம் அதனை உறுதி செய்திருக்கின்றது மதுரை நீதிமன்றம்.

நன்றி:- விகடன்.

Saturday, August 25, 2007

மெல்லத் தமிழ் இனி வளரும்

தமிழ் நாட்டில்லுள்ள மாநில அரசு மற்றும் உள்ளாட்சித் துறையின் மேற்பார்வையில் நடைபொரும் அனைத்து பள்ளிக்கூடகங்களிலும், மெட்ரிகுலேசஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாக கட்டாயம் கற்றுத் தரப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை, இப்போது உயர் நீதிமன்றமும் செல்லும் என்று அங்கீகரித்திருப்பது தமிழ் உணர்வும் தமிழ்மொழி மீது பற்றும் கொண்ட அனைவரும் வரவேற்கவேண்டிய தீர்ப்பு.


தற்போதைய தி.மு.க அரசு செய்திருக்கும் ஒருசில வரவேற்கதக்க நடவடிக்கைகளில் ஓன்றுதான் தமிழ் கட்டாயப் பாடமாக வேண்டும் என்கிற இந்த சட்டம். உயர் நீதிமன்றமும் இந்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்திருப்பதன் மூலம், தமிழகம் மீண்டும் மூன்று மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் இருந்த தடையை நீக்கியிருக்கிறது.

தமிழ் தெரியாமல் தமிழகத்தில் கல்வி கற்க முடியும் என்கிற நிலமை இனி தொடராது! மெல்லத் தமிழ் இனி வளரும்.

நன்றி திணமணி

Friday, March 02, 2007

பறக்கும் நேரம்மிது - இந்தியா

இது உங்களில் பலர் அறிந்த விசயமாக இருக்கலாம். இருந்தாலும், மற்றும் ஒரு முறை.