அவைகளில் சில
- உலகமயமாக்கலில் அமேரிக்கர்களின் நாட்டம் குறைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 க்குள் சீனாவில் (சாங்காய்) இருந்து அமேரிக்காவிற்கு (நீயூ ஜேர்சி) சரக்குகளை கொண்டு செல்லும் செலவினம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் பொருட் மேசை-நாற்காலிகள் தயாரித்து விற்கும் ஒரு சில நிருவனங்கள் தற்பொழுது உள்ளூரிலே தமது உற்பத்தியை செய்ய துவங்கிவிட்டன. தற்பொழுது ஏற்பட்டுள்ள அமேரிக்க பொருளாதரவு சரிவும், ஓபமாவும் இந்த மாற்றத்தை மேலும் துரிதபடுத்துகின்றனர்.
- நகரத்தில் இருந்து தெலைவிலேயே வசிக்க விரும்பும் அமேரிக்கர்கள் தற்பொழுது தங்களது அலுவலகம் இருக்கும் நகரத்துக்கு அருகாமையிலே தமது இல்லங்களை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதனால் பெட்ரோலுக்கு செலவிடும் பணத்தில் சற்று சேமிக்க விரும்புகின்றனர்.
- வாரத்திற்கு 4 நாள் வேலை! கோகோ நகரம், புளோரிடா மாகணத்தில் உள்ள பிரோவர்டு கல்லூரி கோடைகாலத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே (2007-ல் இருந்து) இயங்குகிறது. இதன் மூலம் வருடத்திற்கு $268,000 சேமிக்க இயலுகின்றது. வீட்டில் இருந்து வேலை பார்கும்(Work From Home) பழக்கமும் தற்பொழுது அதிக அளவில் ஊக்குவிக்கப்படுகின்றது.
- குறைந்த அளவிளான சுற்றுபுற கேடு. 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமேரிக்கர்கள், 2007 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 1.4 பில்லியன் மையில்கள் அதாவது 224,00,00,000 KM குறைவாக பயணம் செய்துள்ளனர். இது கிட்டதட்ட 64 மில்லியன் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளது.
- நேர்தியான சிக்கனம்! அமேரிக்காவில் இயங்கும் பொதியூர்திகள் (18 wheeler truck) மற்றும் அதன் நிருவனங்கள் பொதிகளை வினியோகிக்க மிகச்சிறந்த வழித்தடங்களை (Optimal route) கண்டரிய மென்பொருட்களை உபயோகிக்கின்றன!
- சாலை விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைகளும் குறைந்தன.
- மேலே கூறிய காரணத்தால் வாகன காப்பீட்டு (Auto Insurance) கட்டணம் குறைந்தது.
- குறைந்த அளவிளான போக்குவரத்து நெரிசல்.அதனால் சற்று விரைவாக அலுவலகம் செல்ல இயன்றது.
- வேறும்மென வண்டியை ஒடவிட்டு காத்திருக்கும் காவல்காரர்களுக்கு அரசாங்கம் கிடுக்கு பிடி போட்டுள்ளது.
- குறைந்த உடற்பருமன் (Obesity) நோய்! அதிகப்படியான பெட்ரோல் விலையால் அமேரிக்க மக்கள் சைக்கிள்களை அதிக அளவில் உபயோகித்தனர் மற்றும் வெளியே சென்று கண்டதை தின்னும் பழக்கமும் சற்றே குறைந்திருந்தது. பெட்ரோல் விலையை கேலனுக்கு $1 ஏற்றினால் அமேரிக்காவில் உடற் பருமன் நோயை பெரும்மளவு குறைக்க இயலும் என்றும் அதன் மூலம் பல உயிர் இழப்புகளும் தவிர்க இயலும்.