Monday, October 27, 2008

4$ பெட்ரோல் விலையால் அமேரிக்காவில் நடந்த சில நன்மைகள்

இந்த ஆண்டு ஜீன், ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உச்சத்தை தொட்டிருந்த பெட்ரோல் விலை தற்பொழுது அமேரிக்க மற்றும் உலக பெருளாதார வீழ்ச்சியால் விலை குறைந்தாலும், உச்ச விலையும் அதன் தாக்கமும் ஒரு சில நன்மைகளை அமேரிக்காவிற்கும் ஏனைய நாட்டிற்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

அவைகளில் சில

  1. உலகமயமாக்கலில் அமேரிக்கர்களின் நாட்டம் குறைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 க்குள் சீனாவில் (சாங்காய்) இருந்து அமேரிக்காவிற்கு (நீயூ ஜேர்சி) சரக்குகளை கொண்டு செல்லும் செலவினம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் பொருட் மேசை-நாற்காலிகள் தயாரித்து விற்கும் ஒரு சில நிருவனங்கள் தற்பொழுது உள்ளூரிலே தமது உற்பத்தியை செய்ய துவங்கிவிட்டன. தற்பொழுது ஏற்பட்டுள்ள அமேரிக்க பொருளாதரவு சரிவும், ஓபமாவும் இந்த மாற்றத்தை மேலும் துரிதபடுத்துகின்றனர்.
  2. நகரத்தில் இருந்து தெலைவிலேயே வசிக்க விரும்பும் அமேரிக்கர்கள் தற்பொழுது தங்களது அலுவலகம் இருக்கும் நகரத்துக்கு அருகாமையிலே தமது இல்லங்களை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதனால் பெட்ரோலுக்கு செலவிடும் பணத்தில் சற்று சேமிக்க விரும்புகின்றனர்.
  3. வாரத்திற்கு 4 நாள் வேலை! கோகோ நகரம், புளோரிடா மாகணத்தில் உள்ள பிரோவர்டு கல்லூரி கோடைகாலத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே (2007-ல் இருந்து) இயங்குகிறது. இதன் மூலம் வருடத்திற்கு $268,000 சேமிக்க இயலுகின்றது. வீட்டில் இருந்து வேலை பார்கும்(Work From Home) பழக்கமும் தற்பொழுது அதிக அளவில் ஊக்குவிக்கப்படுகின்றது.
  4. குறைந்த அளவிளான சுற்றுபுற கேடு. 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமேரிக்கர்கள், 2007 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 1.4 பில்லியன் மையில்கள் அதாவது 224,00,00,000 KM குறைவாக பயணம் செய்துள்ளனர். இது கிட்டதட்ட 64 மில்லியன் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளது.
  5. நேர்தியான சிக்கனம்! அமேரிக்காவில் இயங்கும் பொதியூர்திகள் (18 wheeler truck) மற்றும் அதன் நிருவனங்கள் பொதிகளை வினியோகிக்க மிகச்சிறந்த வழித்தடங்களை (Optimal route) கண்டரிய மென்பொருட்களை உபயோகிக்கின்றன!
  6. சாலை விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைகளும் குறைந்தன.
  7. மேலே கூறிய காரணத்தால் வாகன காப்பீட்டு (Auto Insurance) கட்டணம் குறைந்தது.
  8. குறைந்த அளவிளான போக்குவரத்து நெரிசல்.அதனால் சற்று விரைவாக அலுவலகம் செல்ல இயன்றது.
  9. வேறும்மென வண்டியை ஒடவிட்டு காத்திருக்கும் காவல்காரர்களுக்கு அரசாங்கம் கிடுக்கு பிடி போட்டுள்ளது.
  10. குறைந்த உடற்பருமன் (Obesity) நோய்! அதிகப்படியான பெட்ரோல் விலையால் அமேரிக்க மக்கள் சைக்கிள்களை அதிக அளவில் உபயோகித்தனர் மற்றும் வெளியே சென்று கண்டதை தின்னும் பழக்கமும் சற்றே குறைந்திருந்தது. பெட்ரோல் விலையை கேலனுக்கு $1 ஏற்றினால் அமேரிக்காவில் உடற் பருமன் நோயை பெரும்மளவு குறைக்க இயலும் என்றும் அதன் மூலம் பல உயிர் இழப்புகளும் தவிர்க இயலும்.
ஒவ்வொரு தீமையும் ஒரு நன்மையோடே வருகின்றது என்பது இதை பார்தால் நம்பத்தான் தோன்றுகிறது.

3 comments:

நம்பி.பா. said...

நண்பரே,

பொதுப் போக்குவரத்து பெரிதாய் கூடியிருக்கிறது. இருக்கும் பொருளாதாரச் சரிவும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுமென்பது ஒரு விதத்தில் நல்லதே!

உடற்பருமன் குறைய ஆண்டுகள் சில ஆகுமென்பதே உண்மை.

தேவன் மாயம் said...

நண்பரே! நலமா?
நட்சத்திர இடுகையாளர்
ஆக இருந்த அனுபவம்
எப்படி இருந்தது?
நல்ல கருத்துக்கள்
நிறைய எழுதுரீங்க!
அப்பப்ப எங்களையும்
கவனிங்க!!!!

இவன் said...

திரு. தேவன் மாயம், தங்களது வருகைக்கு நன்றி! கடந்தவார நட்சத்திரமாய் ஜெலித்தது எனது நண்பர் நம்பி.பா அவரது பிரத்யோக வலை பதிவினை கீழ்கண்ட சுட்டியில் தாங்கள் காணலாம்.

http://vaigaraivaanam.blogspot.com/

நன்றி,
இவன்!