Saturday, January 13, 2007

இந்தியாவை நோக்கி

மருத்துவ சுற்றுலா(Medical Turisom) பற்றி பெரும்பான்மையானவர்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வந்தவர்கள் பற்றிய செய்தியை படித்தேன். ஆனால் அமேரிக்க மக்கள் வந்த செய்தியை சென்ற வாரம்தான் முதல் முறையாக(நான்) பார்த்தேன்.

டெல்லி Planet Hospital பற்றியும் இங்கு அமேரிக்கர்களின் தொடர் வருகையை பற்றியும் ABC News-ல் பார்க நேர்தது. இதை பார்கையில் ஒரு பெருமிதம் கலந்த மகிழ்ச்சி எனக்கு. இந்திய மருத்துவனின் சர்வதேச தரம் உயர்து கொண்டேயுள்ளது என்பது அது.

அமேரிக்க மருத்துவமனைகளில் கிடைக்கும் அதே (அதற்கு மேலும்) தரமான மருத்துவ வசதி இந்தியாவில், அமேரிக்காவில் ஆகும் செலவில் முன்றில் ஒரு பகுதி செலவிலே கி்டைக்கிறது. மேலும் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய நோயாளிகள் எந்த நேரத்திலும் இந்திய மருத்துவருடன் vedio conference முலம் கலந்து ஆலோசிக்க முடியும்.

இது இந்திய முன்னேற்றதிற்கு மேலும் ஒர் பங்களிப்பு.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

குறிப்பு:- மேலே சென்ன செய்தி இரண்டாவது நிமிடத்தில் இருந்து துவங்குகிறது.

2 comments:

நம்பி.பா. said...

இவனே,

ஒருபுறம் இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் காரணியாக இருந்தாலும், இன்னொரு புறம், மருத்துவ சுற்றுலாவினால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான மருத்துவ வாய்ப்புக்கள் குறைவதற்கான வாய்ப்பு பெரிதாக இருக்கிறது.
பல அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்த மருத்துவ சுற்றுலாவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, இவர்களின் தேவைக்கு தரப்படப்போகும் கவனம், நம் ஊர் மக்களுக்காக தரப்படப் போவதில்லை என்பதுவும், இதனால் ஏற்கனவே அதிகமாயுள்ள மருத்துவ செலவுக்கள், இன்னும் அதிகமாகும் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். நமது அரசு இயந்திரம், மருத்துவ சுற்றுலாவிற்கு கொடுக்கும் கவனத்தினை விட, பொது மருத்துவமனை வசதிகளை பெருக்க அதிகம் கவனம் தரவேண்டும்.
இந்த மருத்துவ சுற்றுலாவிற்கு சிறப்பு வரி விதித்து, அந்த பணத்தினை பொது மருத்துவ முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினால் அது இந்திய முன்னேற்றத்திற்கான பங்களிப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

பிகு. நீங்கள் கொடுத்த இணைப்பு,
காம்காஸ்ட் பயனாளர்களுக்கு மட்டுமான இணைப்பாதலால் என்னால் பயன்படுத்த இயலவில்லை!

இவன் said...

//ஒருபுறம் இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் காரணியாக இருந்தாலும், இன்னொரு புறம், மருத்துவ சுற்றுலாவினால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான மருத்துவ வாய்ப்புக்கள் குறைவதற்கான வாய்ப்பு பெரிதாக இருக்கிறது//

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் வெளிநாட்டவர்களால் நிரம்பிவிடாது. முக்கிய நகரங்களில் (டெல்லி, மும்பை, சென்னை, பங்களுர்) இதற்கான சிறப்பு மருத்துவமனைகள் திறக்க வாய்ப்புகள் உள்ளன. IT கம்பனிகள் மாதிரி இதிலும் offshore - onsite model-கள் வரலாம். நடுத்தர வர்கத்தின் வருமானம் கண்டிப்பாக உயரும்.


//இவர்களின் தேவைக்கு தரப்படப்போகும் கவனம், நம் ஊர் மக்களுக்காக தரப்படப் போவதில்லை என்பதுவும், //

அப்படி உறுதியா சொல்ல முடியாது. நம்ம மக்களும் Law suite எல்லாம் கத்துக்கலாம். அரசாங்கம் தனியர் மருத்துவமனைகளில் கெடு பிடிகள் அதிகரிக்கலாம்.

//மருத்துவ செலவுக்கள், இன்னும் அதிகமாகும் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்//

எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது.

//இந்த மருத்துவ சுற்றுலாவிற்கு சிறப்பு வரி விதித்து, அந்த பணத்தினை பொது மருத்துவ முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினால் அது இந்திய முன்னேற்றத்திற்கான பங்களிப்பாக இருக்கும் என்பது எனது கருத்து//

நல்ல யோசனை நம்ம பா.சிதம்பரம் இப்படி யோசிப்பாரானுதான் தெரியலை. இதுக்கு Service Export-னு சொல்லி வரிவிலக்கு அளிக்காமல் இருந்தா போதாது?

இப்பொழுது மருத்துவத்திற்கு ஒதுக்கும் பணத்தை ஒழுங்காக பயன்படுத்தினால் போதாத?